Thursday, July 21, 2022


பணம் சம்பாதிப்பது என்பது அனைவருக்குமான அத்தியாவசிய தேவையாகிவிட்டது. அதைப்போல், 50% நபர்கள் பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பார்ப்பார்கள் என்பது உண்மை, அவ்வாறு பணம் சம்பாதிப்பதன் மூலம் தான் வயிற்றுக்கு சாப்பிட்டுக்கிறோம். அதே நேரத்தில் பலரும் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதைப்போல், வேலை இருந்தாலும் கிடைக்கும் பணம் ஆசைக்கு பத்தவில்லை என்பதுதான் 99% நபர்களின் நிலையாக இருக்கும் என்பதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா? அப்படி சந்தேகம் இருந்தால், உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவராக இருந்தாலும் சரி, அந்தந்த நாட்டின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவராக இருந்தாலும் சரி, யாரேனும் சம்பாதித்த பணம் போதும் என்று தனது வருவாய் நிலையினை குறைக்க ஆரம்பித்திருக்கிறார்களா? எனக்கு தெரிந்து தானாக யாரும் குறைத்ததாக தெரியவில்லை, போட்டியின் காரணமாக சம்பாதிக்க முடியாமல் இருந்திருக்கலாம், மற்றப்படி சம்பாதிக்கும் இயக்கத்தில்தான் இருக்கிறார்கள்.

இந்த மாதம் எந்தவொரு வருவாயும் பெரிதாக இல்லையே என்று, கொஞ்சம் யோசித்துப் பார்க்கையில் கண்களுக்குத் தெரிவது எல்லாம், பெரிய பெரிய கோடீஸ்வரர்களின் வருவாய் போர்ப்ஸ் ரிப்போர்ட்தான். அந்த ரிப்போர்ட்டிலும் அவ்வப்பொழுது ஒரு ஏற்றம் இறக்கம் இருப்பதனை நீங்கள் அறிவீர்கள். அஞ்சி பத்து ஏத்தம் இறக்கமா இருக்குன்னா, அதைப்போல் தான் எல்லோர்க்கும்.

எவ்ளதான் முயற்சித்தாலும் ஈக்குவாலிட்டி என்ற ஒன்றினை என்ற ஒன்றினை கொண்டுவருவது என்பது ரொம்ப கடினமாக இருந்தாலும் கடன் இல்லாமல் வாழ முடியும். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள், இங்கே தான் கடன் வாங்காவிட்டாலும் தன்னைச் சார்ந்தா நாட்டால் கடனாளி ஆக்கப்பட்டுள்ளேன் என்ற நிலையில் அந்த கடனையும் அடைக்க.. அதாங்க நாட்டின் கடன் முழுவதனையும் அடைத்துவிடலாம் என்று முயற்சிக்கும் பொழுது உன் தலையில் ஒர் இலட்சம் கடன் இருக்கு தெரியுமா? அதான்யா இந்திய நாட்டின் கடன் தொகை ஒவ்வொரு ஆண்டுமாக உயர்ந்து இப்பொழுது 154 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் மிமீஸ் பரவிக் கொண்டிருக்கிறது. சரி பரவாயில்லை, கடனை அடைத்துவிட வேண்டும் என்ற முயற்சியினை நாட்டின் விடுதலைக்காக காந்தி ராஜாந்திர திட்டமிட்டு செயல்பாட்டில் இயங்கிய மாதிரி ஒருத்தர், தொடர் முயற்சி போராட்டத்தினை நடத்த வரத்தான் போகிறார், ஏனெனில் இலங்கையில் ஏற்பட்ட வாழ்வியல் கடினமும், அதனால் தொடங்கிய போராட்டத்தில் உச்ச நிலையையும் செய்தியாளர்கள் கண்முன் கொண்டுவந்து காட்டியதனை பார்த்தாச்சி.. அடுத்தக்கட்டமாக, நமது நாட்டின் கடன் தொகையால், அதற்கான வட்டி குட்டின்னு நாளும் கொடுக்க வேண்டிய தொகை ஏறுவதால், இத்திட்டம் தான் செயல்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தினால் ஏற்படின் விலைவாசி உயர்வு ஒருபக்கம், வட்டிக்கு விலையை உயரும் விலை ஒருபக்கம் என விலை ஏற்றம் என்பது 2014 ஆம் ஆண்டில் 410ரூபாயாக இருந்த கேஸ் விலை இன்று ரூ.1053 ஆக உயர்ந்திருப்பதன் மூலம் நன்றாக தெரிகிறது.

விலையை ஏற்றுவதன் மூலமே சம்பாதிப்பவர்களுக்கு ஒன்றும் தெரியப்போவதில்லை. இந்த விலை ஏற்றத்திற்காகவே பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவர்களுக்குத்தான் இதன் உண்மை தாக்கம் நன்றாகத் தெரியும். அதிலும், நாளை உணவுக்குக் கூட பணம் போதவில்லை என்ற நிலை வரும் பொழுது நாட்டில் பெரும் போராட்டம் நடைபெறும் எப்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.

எல்லா நாட்டிலும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருக்கிறது. இவர்களைக் காக்கவே நிறைய பாதுகாப்பாளர்களும் பணி செய்கிறார்கள் என்பதும் நாட்டு நடப்பின் நிலை சந்தேகக் கேள்வியினை கொண்டுவருகிறது. ஆனால், இவர்கள் எல்லோருடைய எண்ணிக்கையைக் காட்டிலும் பலமடங்கு எண்ணிக்கையிலான மக்கள் ஏழ்மையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஏழ்மை மக்களிடமிருந்து நாளை பசிப்புரட்சி ஏற்படலாம் என்ற அச்சம் பெரும் பணக்காரர்கள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டது என்பதனை உணரலாம். அவ்வாறு பசிப்புரட்சி ஏற்பட்டால் என்ன ஆகும் என்ற கேள்விக்கு டொமோ பார்க்கையில் பெரும் பணக்காரர்களின் சொத்துக்கள் சூறையாடப்படலாம் என்ற அச்சம் கோடீஸ்வரர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

பசிப்போராட்டம் உருவாகினால், அது கண்டிப்பாக தன் பசியினை போக்கும் நிலையினை அடையாமல் அடங்காது. ஆகையால், அதனை அடக்க ஒன்று பசியினை போக்க வேண்டும், இல்லாவிட்டால் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும். அதாவது, உணவு அல்லது மரணம்.

இன்றைய உலக நடப்பினை அறிந்து கொண்டுதான் நாளின் செயல்பாட்டிற்கு செல்ல வேண்டியுள்ளது. ஒர் ஜான் வயிற்றுக்குத்தான் பணம் சம்பாதிக்கிறோம் என்றாலும், அதனை நிலைப்படுத்திக் கொள்ளவும் சம்பாதிக்க வேண்டியுள்ளது. அத்தோடு ஒர் வயிற்றோடு நிற்க முடியாது, குடும்பத்திற்கும் சேர்த்துதான் சம்பாதித்தாக வேண்டும்.

நேர்மையாக பணம் சம்பாதிப்பதே அனைவரது குறிக்கோளாக இருந்தால், கண்டிப்பாக இத்தகைய கடின காலம் நமக்கு வராது. அப்படியானால், எல்லோரும் நேர்மையாக சம்பாதிக்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது என்பது உண்மைதான். ஆனால் நேர்மையாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை உண்மையாக உள்ளது.

90% மக்கள் நேர்மையாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையோடுதான் இருக்கிறார்கள். உங்களுக்கும் நேர்மையாக பணம் சம்பாதிக்க வேண்டும், தானும் ஊரும் நாடும் நல்லா இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்குமாயின், கூகுள் ஆன்லைன் ஜாப் மூலம் நேர்மையாக இலட்சங்களை சம்பாதித்து கோடீஸ்வரர் ஆகமுடியும்.  இது உண்மைதான், என்ன செய்கிறார்கள் என்றே தெரியாமல் யுடீயுப் மூலம் தன்னிடம் இருக்கும் திறமையை அல்லது இயல்பை வெளிப்படுத்தி பல இலட்சங்களை பலர் சம்பாதித்துவிட்டனர்.

தன் திறமையை காட்டுவது என்பது கொஞ்சம் கடினமான முயற்சியாக இருக்கும். ஆனால் தற்போதைய இயல்பினை வெளிப்படுத்துவது என்பது மிகவும் எளிதான ஒன்று. அவ்வாறு மிகவும் எளிதாக கையிலிருக்கும் சின்ன மொபைல் போனை கையில் வைத்து யுடியூப்பில் சம்பாதிக்கிறார்கள்.

ஆனாலும் சின்னச் சின்ன தயக்கம், எதனை செய்வது, எப்படி செய்வது என்ற கேள்விகளும் தயக்கமும் பலருக்கும் இருக்கிறது. அதிலும் தன் இயல்பினைக் கூட வெளிப்படுத்த தயங்குபவர்கள் நிறைய நிறைய என்பதனை என்னுடைய இயல்புகளை வெளிப்படுத்தாமல் இருப்பதிலிருந்து உண்மையென நம்புகிறேன்.

தன் இயல்புகளை வெளிப்படுத்த தயங்குபவர்கள் சம்பாதிக்க முடியாது என்றில்லை, பின்னாலிருந்து கூட சம்பாதிக்க முடியும். அவ்வாறும் பலர் பின்னாலிருந்து ஆன்லைன் ஜாப்பில் சம்பாதிக்கிறார்கள். ஆகையால் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் துவங்கிவிட்டால் போதும் நீங்களும் கண்டிப்பாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் ஜாப் மூலம் சம்பாதிக்கலாம், உங்கள் செயல்பாட்டினை தொடங்குங்கள்.

என்ன செய்வது என்று தெரியாமல்தான் இங்கே வந்தோம், இங்கேயும் செய்யுங்கள் செயுங்கள் என்று சொல்கிறீர்கள், என்ன செய்வது என்று சொல்லி செய்ய வைத்து கையில பணத்த வாங்கிக் கொடுக்கமாட்டீர்களா? என்ற கேள்விதான் ஆரம்பித்திலிருந்து கடைசிவரை அப்படியே இருக்கிறது என்றால், கவலையை விடுங்கள், அடுத்து அடுத்து தொடர்வது செயலாக இருக்கட்டும் என்று திட்டமிட்டு தொடர்கிறேன்.

நன்றி.

காசேதான் கடவுளப்பா...
https://www.youtube.com/watch?v=WNxSx0YZ1eQ

நேர்மையாக பணம் சம்பாதிக்க ஆன்லைன் கூகுள் ஜாப்

  • Uploaded by: Forex Trading Site
  • Views:
  • Category:
  • Share

    0 comments:

    Post a Comment

     

    Our Team Members

    Copyright © Forex Trading Tutorial | Designed by Templateism.com | padugai.com
    Introducer of

    FxPro

    WARNING: .

    Legal: FxPro Financial Services Ltd is authorised and regulated by the CySEC (licence no. 078/07)

    Risk Warning: CFDs, which are leveraged products, incur a high level of risk and can result in the loss of all your invested capital. Therefore, CFDs may not be suitable for all investors. You should not risk more than you are prepared to lose. Before deciding to trade, please ensure you understand the risks involved and take into account your level of experience. Seek independent advice if necessary.
    IMPORTANT NOTE: this site belongs to an FxPro affiliate and not to FxPro. Therefore, the content of the site including but not limited to material, information, opinion(s), advertisement(s), suggestion(s) and product(s) on offer is not endorsed by FxPro. Consequently, FxPro does not assume any liability for any representation made through this site and is not responsible for any loss incurred as a result of such representation.