சுமார்ட்டா சிந்திக்கச் சொல்லிக் கொடுக்க ஆயிரம் நிறுவனங்கள், அவர்களுக்கு பக்கப்பலமாக ஆயிரம் ஆயிரம் நிறுவனங்கள் என ஒன்றுக்கு ஒன்றுக்கு இணைப்பாய் நல்லா டைட்டா சங்கிலிப் பிணைப்பாய் செயல்படும் திட்டத்தோடு இணைந்தால், நித்திரையிலும் சம்பாதிக்கலாம் என்பது இணைய செயல்பாடாகிவிட்ட நிலையில் சாத்தியம் சத்தியம். அதிலும், அப்படியே கொஞ்சம் கொஞ்சம் போட்டு வைங்க.. கொஞ்சம் கொஞ்ச குட்டி, குட்டிக்கு குட்டின்னு கோடி வாங்கிக்கோன்னு நிறைய திட்டங்கள், அதிலும் நீங்கள் என்னங்க செய்யப்போறீங்க, அவங்களே செய்றாங்க.. தேதிக்கு கொடுத்தால் போதும், தொகுப்பா லம்பா பெரிசா ஒர் தொகை, பை நிறைய கிடைக்கும் என்பது எங்கெங்கினும் ஒலிக்கும் சேதி. ஆனால் எல்லாமே இருக்கிறத பெரிசு படுத்தும் செய்தியே தவிர, இல்லாமல் ஏதும் சார் கிடைக்கும்னு போய்டுவாங்க... அதிலும் பெரிய தகவல் பகிர்வு, மாதம் மாதம் கொஞ்சமாக கட்டுங்க.. 25 வருடத்தில் 2 கோடி ரூபாய் கிடைக்கும் சூப்பர் ப்ளான் இருக்குன்னு, கோர்ட் சூட் போட்டு கை நிறைய புத்தம் நோட், பிரிண்ட் பேப்பர்.. டாக்ஸ்னு நல்லா தெளிவா டெர்ம்ஸ் & கண்டிசனோடு, ஒர் நல்ல நிறுவனத்தின் ஆபர்ங்க, தவறவிட்ராதீங்கனு சொன்ன தம்பிக்கிட்ட, தவறா நினைக்காதீங்க, 2 கோடிய இப்போ கொடுத்தீங்கன்னா, 25 வருடமும், மாதம் மாதம் தவறாமல் தவணையை இரட்டிப்பாக கொடுக்கிறேன், அதற்கான திட்டம் இருந்தால் சொல்லுங்க, புண்ணியம் வந்து சேரும்னு கேட்டதற்கு, தலைதெறிக்க தம்பி தப்பித்து போனதாக வலம்வரும் வாட்சப் செய்தி சிந்திக்க வைத்தது. நாமும் அப்படி கேட்டால்தான் என்ன? அப்படியான திட்டங்கள் மட்டும் ஏன், தம்பியின் திட்டம்போல் ஒரே நாளில் நிகழ்வுக்கு வரமாட்டேங்குது.. அழையோ அலைனு அலைந்தால் 1 இலட்சம் கூட முன்னே பெற படாதபாடு. அந்த ஒத்த இலட்சத்திற்கு இருக்கிற எல்லாத்தையும் கேட்டு வாங்கிடுவாங்க போலிருக்கிறது. ஆனால், கோடிக்கு நமக்கு என்ன எழுதி தர்றாங்கோ? ஏதோ, நடந்துச்சின்னா நாமம் ஒர் கண்டிசனாக இல்லாமல் இருந்தால் சரி என்பதுபோல, அங்கெங்கும் எங்குமாய் சரியாக மார்க்கெட் சப்ஜெக்ட் ரிஸ்க் ஆகாமல் இருந்தால் சரி, ஆனால் மஞ்சளா ஒர் நோட்டீஸ் போய்டுச்சின்னா? எதுவுமே தெரியாது என்பதுதான் இளைய தலைமுறையின் நிலை.
இளம் தலைமுறையிலிருந்து, தலைமுறை நிலைக்கு வந்துவிட்ட நிலையிலும் ஏமாற்றம் என்பது ஒர் புதிய பாடமாய் வந்துகொண்டுதான் இருக்கிறது என்பதிலும் வரும் தலைவலி எப்போதுதான் தீர்மோ!!!
ஆனால், கனவு காணுங்கள் கண்களுக்கு விருந்தளியுங்கள், என்பதற்கு இணங்க, நித்திரையில் கோடி கோடியாய் எத்தனை கோடியானும் சம்பாதிப்பதில் அர்த்தம் உண்டு. ஒரே ஒர் மாதம்தான், ஒர் வெப்சைட் வாங்கியாச்சி.. வாங்கிய வெப்சைட்டை விளம்பரம் செய்தாகிடிச்சி.. அப்படியே இமெயிலா வந்திக்கிட்டே இருக்கு .. You Got Paid .. Payment Received .. Your Account Credited .. அப்படின்னு மெயில் வந்திக்கிட்டே இருக்கு ... எவ்வளவு .. எவ்வளவு என.. பார்த்து சரி பார்ப்பதற்கே நேரம் பத்தல... நேரம் பத்தாமல், பசியும் பறந்துப் போச்சு... சந்தோசமான பட்டினியில் தூக்கம் போச்சு... 48 மணி நேரம் கடந்ததுகூட தெரியல .. கோடி கோடி.. பல கோடி கணக்கில் வந்திடுச்சி... வந்த கோடிகளை எப்படி எடுத்து செலவிடுவது என்பது கூட தெரியல.. காதுக்குள்ள எது எதுவோ பேசுது. ஆனந்தக் கூத்தாடுது.. கூத்தாடுவது எதுன்னு கூட தெரியாத இளசுக்கு சொல்லுவது எல்லாம் கற்பனைக்கும் எட்டாத பெரிய கதைன்னு தெரியாது. ஒ .. ஒஹோ.. அதுவா சேதின்னு .. அதென்னா வெப்சட்டு ... 48 மணி நேரத்திற்குள் கோடி கோடியா கொட்டுற சைட்டு .. அத எங்கப்போய் வாங்குவதுன்னு, தெருவுத் தெருவா தேடுவதுபோல.. பேஸ்புக்லையும் கூகுள்ளையும் .. ட்விட்டர்லையும் தேடித் தேடிப் பிடிச்சிடுவாங்க... பிடிச்சக் கையோடு.. எத்தனிய இலட்சம் வேண்டும் என்று கேட்டும் கேட்காமலே அளிக்கொடுத்திடுவாங்க...
அட சொல்ல வர்றதே புரியலையா? புரியாமல்தான் நானும் புலம்பிக்கிட்டு இருக்கேன். ஆன்லைன் ஜாப் என்பது எத்தனை கடினம் என்பது செய்து கொண்டிருப்பதோடு, சோத்துக்கு பத்தலையேன்னு இராப்புள்ளா தூங்காமல் உழைப்பவனுக்குத் தெரியும். ஆன்லைன் ஜாப் எத்தனை உண்மை என்பதும், அது எப்படி பசிக்கு பசியாற உணவளித்தது என்றும். ஆனால், அதனையும் தாண்டி, பீரோவையே காலி செய்துவிடும் என்பதும் உண்மைதான்.
இருபக்கத்தில் எந்த பக்கத்தில் இருக்கிறோம் என்பதனை புரிந்து, அதற்கு தகுந்தாற்போல் செயல்பட... கொஞ்சம் ஆன்லைன் ஜாப் பற்றி நல்ல நபர்களுடன் பேசி கலந்துரையாடி செயல்பட்டால் நல்லதுதான். ஏனெனில் சமீபத்தில் பத்திரிகை செய்திகளில் பல ஆயிரம் கோடி ஆன்லைன் புரட்டு நடந்துள்ளது என்பதனை பிரதிபலிப்பதுதான்.
அப்படியே, இங்கிலீஸ் மேன் ஸ்டைலில் சொல்றேன் ...பேசிட்டே சாப்பிட ஒர் வொயின் ஆர்டர் பண்ணிடுங்கோ
0 comments:
Post a Comment