புத்தாண்டு பிறந்துவிட்டால், இந்தாண்டு ஏதேனும் சாதித்திட வேண்டும் என்ற ஒர் புத்துணர்ச்சி பிறந்தாலே அந்தாண்டு மிகவும் சிறந்த ஆண்டாக அமைந்துவிடும். கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத உத்வேகம் இந்தாண்டு பிறப்பில் அமைந்திருக்கிறது என்கிறது பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எண் கணிதம் ஒர் சிறந்த ஜோதிடம் எதிர்கூறல் ஆக மேற்கத்திய நாடுகளில் நம்பப்பட்டு, தற்பொழுது உலகிற்கே பெற்றோராக திகழும் நமது தமிழ் நாடு எண் கணிதத்தை வரவேற்றுள்ளது என்றே சொல்லலாம். அந்த வகையில் 2023 என்ற ஆண்டின் கூட்டுத்தொகை 7. ஏழு என்ற எண் ஒர் பூரண எண், நல்லது கொடுக்கும் எண் என்று சொல்லப்படுகிறது. நிறங்கள் ஏழு, சப்த கன்னிகள் ஏழு, என ஏழு என வகைப்படுத்தி பூரணப்படுத்தப்பட்டவை பல ஆகும்.
இந்த ஆண்டும் ஒர் வாழ்க்கைக்கு ஒர் பூரணத்துவத்தினை வழங்கும் என மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறேன். அதிலும் வாழ்வின் பூரணத்துவம் எது என ஒர் வரையறை இல்லாவிட்டால், அதிலும் பூரணத்துவம் அடைவது என்பது மிகவும் கடையும். ஆகையால் ஆசையைத் தூண்டி, எண்ணத்தினை வளர்த்து மனக் கோட்டையில் இவ்வாண்டின் பூரணத்துவத்தினை சிறப்பாக வடித்துவிட வேண்டும் என்பதற்காக குபரேன் துணைக்கு அழைக்கவா, விஷ்வகர்மா துணைக்கு வேண்டுமா, சுக்கிரன் கண்டிப்பாக அழைத்திட வேண்டுமே, போதுமா , குரு வரவேண்டுமே என அடுக்கடுக்காக ஆசையை படர விட்டு.. சொகுசான இன்ப வாழ்விற்கான வேண்டியதனை கற்பனைக் கோட்டையில் கட்டுவதற்கு இன்றைய நாளில் தேவையானது மந்திரம் என்று சொல்ல முடியாது, பூன்னு புகையைப் போட்டால் வந்து நிற்கும் சிவன் போல சீரியல் ஆகிடக்கூடாது அல்லவா, ஆகையால் கட்டுக்கட்டா பணம் வேண்டும். கட்டுக் கட்டா குமிச்சிப் போட்டால் எடுத்து எண்ண நேரம் ஆகும் என்பதால், எடுத்துக்கோ எடுத்துக்கோன்னு கட்டுக் கட்டாக கொடுத்து வாழ்வினை சிறப்பாக வாழ்ந்திட ஆண்டவனே துணை என்று இஷ்டத் தேவதை மீது பாரத்தினை ஆண்டுக்கான பிரார்த்தனை தொடங்குகிறது.
கடந்த ஆண்டில் பெரிதும் நம்பப்பட்ட சிபா காயின் இலக்கினை எட்டவில்லை. ஆனால் இந்த ஆண்டு பெரிய வாய்ப்பாக அமையும் என்று பெரிதும் நம்புவதற்கு காரணம் கடந்த 2020 -இல் அறிமுகம் ஆன சிபா காயின், இன்றளவும் டாப் லெவல் ட்ரேடிங் லிஸ்ட்டில்தான் உள்ளது.
கடந்த ஆண்டு ஆரம்பித்தில் ஓர் பெரிய இலாபத்தினை கொடுத்துவிட்டுதான் திரும்பியது என்பதால், அடுத்தக்கட்ட டார்கெட்டினை நோக்கி அடியெடுத்து வைக்கும் என பெரிதும் நம்பப்படுகிறது. பல கிரிப்டோ வர்த்தகர்களும், சிபா காயின் பற்றி நல்லத் தகவல்களை வெளியிடுவது என்பது மகிழ்ச்சியாக் இருக்கிறது. ஆகையால், இந்தாண்டு சிபா சிகரம் தொட வைக்கும் என்ற நம்பிக்கை வைத்துதான் ஆக வேண்டும். நம்பிக்கையே இல்லாமல் முன்னேற முடியாது, சுயமாக என்பதும் ரொம்ப கஷ்டம். உலக நம்பிக்கையோடு... கூட்டுப் பிரார்த்தனையாக, பலரும் மனதால் நம்பி வாங்குவதுபோல... நமது மனதினையும் அந்த நம்பிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக 100 ரூபாய்க்கு சிபா காயின் வாங்கிடலாம்.
100 இந்திய ரூபாய்க்கு சிபா காயின் வாங்கினால், 137000 ஆயிரம் சிபா காயின் கிடைக்கிறது. 37000 ஆயிரத்தினை பீஸ்க்கு கட்டிட்டாலும் 100000 ரூபாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
மலையை மயிரில் கட்டி இழுப்பது என்பது இதுதான். ஒர் இலட்சம் ரூபாயை 100 ரூபாயில் கட்டி இழுப்பதற்கும் ஒர் தைரியம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இதெல்லாம் சாத்தியம் ஆகும். ஏனெனில் சரித்திரத்தில் இடம்பிடிக்கும் எல்லா வரலாறுகளும் இப்படித்தான்... கையில் காசு இல்லை... ஒர் மஞ்சப்பையோடு சென்னைக்கு வந்தேன் .... அடுத்த நாள் சோற்றுக்கே வழியில்லாமல் வந்தேன்.. இப்படியெல்லாம் வரலாறு படித்தாலும் அவர்களிடம் இருந்த மன தைரியம் என்பது மிகப் பெரியது. அந்த மிகப் பெரிய மன தைரியம்
Shiba 100 ரூபாயில் இலட்சம் இலட்சம்
Views:
Category:
0 comments:
Post a Comment