தங்கத்தின் பயன்பாடு என்பது அதிகரித்துக் கொண்டே இருப்பது ஒர்பக்கம், உலக நாட்டின் பொருளாதாரத் தாக்கம், இந்திய ரூபாயின் வீழ்ச்சி, அமெரிக்க பெடரல் வங்கியின் நடவடிக்கை என தங்கத்தின் விலை மதிப்பு இந்த ஆண்டு பெரிய அளவில் உயரும் என பல வல்லுனர்கள் எடுத்துரைக்கின்றனர்.
வல்லுனர்கள் சொல்லியப்பின்னர் என்ன, கொஞ்சம் தங்கத்திலும் முதலீடு செய்து வைப்போம் என்று தங்கக் காயினை வாங்குபவர்கள் அதிகமாக இருப்பார்கள். அதைப்போல், இப்போதெல்லாம் தங்கத்தில் முதலீடு செய்ய சேமிப்பு பாங்க் அக்கவுண்ட் இருந்தால் போதும், அங்கே தங்க முதலீடு திட்டத்தில் வாங்கிவிடலாம். பிற்காலத்தில் சந்தை மதிப்பிற்கு ஏற்ப வாங்கிய காயினை கொடுத்துவிடலாம். அல்லது காயினாகவே கையிலும் பெற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment