எல்லோருக்கும் தெரிந்த தளங்கள் என்பது மிகவும் கொஞ்சம். அதிலும் மோசடி இணையதளங்கள் என்பது யாருக்கும் தெரியாது. பின் எப்படி மோசடி இணையதளங்களில் சென்று ஏமாறுகிறார்கள் என்றுப் பார்த்தால், தெரிந்த தளங்கள் வழியாகத் தான் தெரியாத தளத்திற்குள் போய் மாட்டியிருக்கிறார்கள்.
தெரிந்தளங்கள் எவை.. அதிலும் எவை எவை முக்கியமான தெரிந்த தளங்கள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த தெரிந்த தளங்கள் மோசடி தளங்கள் கொடுக்கும் பணத்தினை வாங்கிக் கொண்டு, பிறரை மோசடி செய்ய உதவுகின்றன என்ற சந்தேகம் எழுவது என்பது இயல்புதான். அந்த சந்தேகத்தினை உறுதிப்படுத்தத்தான், சரியான காரணம் வேண்டும்.
நீங்கள் ஆன்லைன் இணையதளத்தில் மோசடிக்கு உள்ளானால், அந்த தளத்தினை பற்றிய தகவல் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்று கொஞ்சம் அலசிப் பாருங்கள்.
தெரிந்த பெரிய தளங்களா? அவ்வாறு இருப்பின் அவர்களிடமிருந்து என்னப் பாதுகாப்பு வேண்டும்? ... பணம் தருகிறார்கள் என்பதற்காக உடனே விளம்பரத்தினை செய்யும் தளங்கள் போதிய கட்டுப்பாடுகளை கண்டிப்பாக விதிக்க வேண்டும்.
ஏனெனில் எல்லோர்க்குமான கட்டுப்பாடுகள் என்பது பெரிய தளங்களுக்கும் இருத்தல் வேண்டும். இல்லையெனில், பெரிய தளங்கள் போல எளிய நடைமுறையை அனைவரிடமும் இருந்தால் போதும் என்ற நடைமுறை வேண்டும்.
சமீப காலத்தில் விளம்பரம் மூலம் தவறான இணையதளத்தில் சென்று ஏமாறுவது என்பது அதிகரித்து வருகிறது. ஆகையால், அத்தகைய விளம்பரங்கள் வராமல் தடுக்க வேண்டியதும் பெரிய இணையதளங்களின் கடைமையாக இருத்தல் வேண்டும்
விளம்பரம் வெளியிடும் தளங்கள் மோசடிக்கு உதவுகின்றனவா?
Views:
Category:
0 comments:
Post a Comment